கோடிகளுக்கு விலைபோன பவானி தேவி வாள்

275
Advertisement

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில், பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளின் பொருட்கள் ஏலம் விடப்பட்டன. இதில் சென்னை பெண் பவானி தேவியின் வாள் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன.


மத்திய கலாசாரத்துறை நேற்று பல பொருட்களை இ-ஏலம் விட்டது. இதில் பாரம்லிம்பிக் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகள் பயன்படுத்திய உபகரணங்களும் ஏலம் விடப்பட்டன.

அந்த வகையில் பென்சிங் போட்டியில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த தமிழக வீராங்கனை பவானி தேவியின் வாள் 10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.

அதேபோல், டோக்கியோ பாராலிம்பிக் ஒலிம்பிக்கில் பேட்மிண்டனில் தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற எத்திராஜ் பயன்படுத்திய ராக்கெட் 10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டன.

ஈட்டி எறிதல் போட்டியில் நாட்டுக்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்த நீரஜ் சோப்ராவின் ஈட்டி 1 கோடியே 20 லட்சம் கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படை விலை 1 கோடி ரூபாய் ஆகும்.

இந்திய பாக்சிங் வீராங்கனை லோவ்லினா பயன்படுத்திய கையுறைகள் 1 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனது.