இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, இரவில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

104
Advertisement

திருச்சி சிறை சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி, இரவில் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள், பாஸ்போர்ட் மற்றும் விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியவர்கள் என பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கை, ஆஸ்திரேலியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 116 பேர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் நேற்றிரவு, சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.