இந்த நாட்டு மக்களுக்கு இனிய செய்தி…

381
Advertisement

இலங்கையில் அமைதி நீடிக்க, தமிழ் அமைப்புகளுடன் நல்லிணக்கம் அவசியம் என்று அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்


நியூயார்க்கில் நடந்து வரும் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபய கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், உலகளாவிய சவாலாக தீவிரவாதம் இருப்பதாகவும், இதை ஒடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இலங்கை மக்களுக்கு வளமான, நிலையான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவது தனது அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்த இலக்கை அடைய உள்நாட்டு அமைப்புகள், தமிழ் அமைப்புகள், ஐநா சபையின் நல்லிணக்கம் ஆகியவற்றை பெற இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.