இந்திய அணியை எச்சரித்த பாகிஸ்தான் பவுலர்

296
Advertisement

ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் டி-20 உலக கோப்பையில், இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது.

முன்னதாக ஆசியக் கோப்பையின் முக்கிய போட்டியான சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியிடன் இந்தியா படு தோல்வி அடைந்தது, இதனால் ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறியது.

ஆனால் இம்முறை உலகக் கோப்பையில் இந்திய அணி தனது கெத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது, இதனை அறிந்த பாகிஸ்தான் பவுலர் ஹரிஸ் ரவுஃப் ( haris rauf ) இந்திய அணியை தற்போது எச்சரித்துள்ளார்,

அவர் கூறியதாவது, நான் என்னுடைய முழு திறனைப் பயன்படுத்தி பந்து வீசினால், இந்திய பேட்டர்கள் திணறுவார்கள் என்று கூறினார், அதிலும் இப்போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கவுள்ளது,

ஐ.பி. எல் போல் ஆஸ்திரேலியாவில், டி- 20 தொடர் நடக்கும் அதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஹரிஸ் ரவுஃப் விளையாடுவார், இதனால் பிச் (Pitch) எப்படி ஆட்டத்தில் மாறும் என்பது தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், அதுபோல் முன்னதாகவே இந்திய பேட்டர்களுக்குப் எப்படி பந்து வீச வேண்டும் என்று திட்டமிட்டு வருவதாக இந்திய அணியை எச்சரித்துள்ளார். எனவே ஹரிஸ் ரவுஃப் பேசியது குறித்த கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.