இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 10%-ஆகக் குறைத்த ஆசிய வளர்ச்சி வங்கி..!

345
Advertisement

இந்திய பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக இருக்கும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது.


இதுத்தொடர்பாக, ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 11 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், தற்போது கணிப்பை ஒரு சதவிகிதம் குறைத்து 10 சதவிகிதமாக கணித்துள்ளது.

கொரோனா 2-வது அலையால் பொருளாதார வளர்ச்சி சதவிகிதம் குறைந்துள்ளதாகவும், மீதமுள்ள 2 காலாண்டுகளில் பொருளாதாரம் மீண்டெழும் எனவும் தெரிவி்த்துள்ளது.