அஷ்வினை ஓரங்கட்டும் டிராவிட் – கேப்டனை மதிக்காத பாண்டியா 

263
Advertisement

குரூப் 4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் அணியிடம் மோசமாகத் தோற்ற நிலையில், அனைவரும் அர்ஷ்தீப் சிங் தவறவிட்ட கேச்சுதான் (Catch ) காரணம் என்று கூறியிருந்தார்கள், ஆனால் இதைத் தவிர பல தவறுகளை இந்திய அணி செய்திருந்தது, அதனை விலாவரியாக இந்த வீடியோவில் பார்க்கலாம், இந்திய அணி 181 ரன்கள் அடித்தும் தோற்றதற்கான முதல் காரணம் ஜடேஜா அணியிலிருந்து வெளியேறியப் பிறகு, அவருக்குப் பதிலாக  மற்றொரு சிறந்த ஸ்பீன்னரான அஷ்வினை பிளேயிங் 11-ல் விளையாட வைத்திருக்கவேண்டும், ஆனால் அவர்க்குப் பதிலாக பேட்டிங்கை பலப்படுத்தும் வகையிலும் மற்றும் பவுலிங்கில் சில ஓவருக்கு பயன்படுத்தலாம் என்று ஹூடாவை அணியில் எடுத்தனர், ஆனால் அவருக்கு ஓவரே தரவில்லை, இதுவே அஷ்வினை எடுத்திருந்தால் பாகிஸ்தான் பேஸ்ட்மேன்களான ரிஸ்வான் மற்றும் நவாஸ் மிக வேகமாக ரன்கள் அடித்திருக்க கடினமாகா இருந்திருக்கும், அதுபோல ரிஷப் பந்த் பதிலாக ஹர்டிக் பாண்டியாவை களமிறங்கச் சொல்லி கேப்டன் ரோஹித் சர்மா, பாண்டியா விடம் கேட்டுக் கொண்டிருந்தார், ஆனால் பாண்டியா களமிறங்க மறுத்து வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார், இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது, ஆனால் விருப்பப்பட்ட இடத்தில் பாண்டியா களமிறங்கிய பிறகு மிகவும் அலட்சியமாக ஷாட் விளையாடி டக் அவுட் ஆகியிருந்தார் , இந்திய அணியில் ஒரு சீனியர் வீரராக பாண்டியா வளர்ந்து வந்தாலும், அணியின் கேப்டன் பேச்சை கேட்காமல் இருப்பது, இவரது எதிர்காலத்திற்கு நல்லதில்லை. இதுவே இந்திய அணி செய்த முக்கிய தவறுகள் ஆகும்.