Monday, January 20, 2025

பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

பண்ருட்டி அருகே, மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நடுசாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் யோவான் ஆம்ரோஸ். இவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். பண்ருட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, யோவான் ஆம்ரோஸின் கூரை வீட்டின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டின் மற்ற சுவர்கள் ஈரப்பதத்துடன் இருந்துள்ளன.

இந்நிலையில், வழக்குபோல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த ஆம்ரோஸ், லைட்டை போடுவதற்கு சுவிட்ச் ஆன் செய்துள்ளார். அப்போது அவரை மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. அவரை உறவினர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆம்ரோஸை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த காடாம்புலியூர் போலீசார் உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர்.

Latest news