வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனம் திருட்டு போவதாக வந்த புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில், காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின் பேரில், காட்பாடி போலீசார், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இருசக்கர வாகனம் திருட்டில் ஈடுபட்ட மேல்விஷாரம் பகுதியைச்சேர்ந்த முஜமின் என்பவர் வாகன தணிக்கையின்போது சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.