வாட்ஸ் அப் பயன்படுத்தியதற்காகவும், ஜிமெயில் பயன்படுத்தியதற்காகவும் ஒரு பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில்தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வாட்ஸ் அப், பள்ளி ஜிமெயில் பயன்படுத்துவது சீனாவில் சைபர் குற்றமாகக் கருதப்படுகிறது. அதனைமீறுவோர் முன்குற்றவாளிகளாக் கருதப்படுகிறார்கள். வெரே ஜோவ் என்ற மாணவி இப்படி முன்குற்றவாளியாக்கப்பட்டு 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
வெரே ஜோவ் தனது பள்ளி வீட்டுப்பாடத்தைச் சமர்ப்பிப்பதற்காக VPN என்னும் VIRTUAL PRIVATE NETWORKஐப் பயன்படுத்தி ஜிமெயில் அக்கவுண்டில் நுழைந்துள்ளார். மேலும், வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தியுள்ளார்.
அதனைக் கண்டுபிடித்துவிட்ட சீன அதிகாரிகள் அந்த மாணவியை நியோன் பச்சைக்கோடுள்ள சீருடையை அணியச்செய்து சிறைக்குள் அடைத்துவிட்டனர். அத்துடன் மறுபடியும் பள்ளிப் பாடத்தைக் கற்கச் செய்துள்ளனர்.
இதனால் 2018 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டையும் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் சிறையிலேயே கழித்துள்ளார் வெரே ஜோவ். அவருடன் மேலும் 11 பெண்களும் இந்தச் செயலுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
6 மாதக் காலத்திற்குப் பிறகு உள்ளூரிலேயே தங்கவேண்டும். அருகிலுள்ள அதிகாரியிடம் தவறாமல் ஆஜராக வேண்டும் என்கிற நிபந்தனையின்பேரில் வெரே ஜோவ் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே மற்றொரு பெண்ணும் வாட்ஸ் அப்பைப் டவுன்டோடு செய்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார்.
சீனாவின் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, நெட்ஒர்க் ஆபரேட்டர்கள் தங்களிடம் வருகை தரும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை சீன அதிகாரிகளிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
அந்த வகையில், இந்தச் சட்டத்தை மீறியதற்காக மற்றொரு பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் ஆபரேட்டர் தனது User IDயைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சிம் கார்டு பெற அனுமதித்த செயலுக்காகக் கைதுசெய்யப்பட்டுள்ளார். என்றாலும், கைதுசெய்யப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
கைதுசெய்யப்பட்ட பெண்கள் அனைவரும் சீனாவின் உயர்தொழில்நுட்பக் கண்காணிப்பு அதிகாரிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சீன அரசாங்கம் மறுத்துள்ளது.