தமிழ்நாட்டில் சென்னை தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில்களை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகளை சென்னை மெட்ரோ ரயில் கழகமான சிஎம்ஆர்எல் தான் மேற்கொள்ள இருக்கிறது.
மதுரையில் 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு 26 ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவையும், கோயம்புத்தூரில் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளும் நடைபெற இருக்கின்றன.
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆயத்த பணிகள் தொடர்பாக சிஎம்ஆர்எல் மேலாண் இயக்குனர் சித்திக் ஆய்வு நடத்தினார். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அடுத்த 6 முதல் 9 மாதங்களுக்குள் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று முடிய நான்கரை ஆண்டுகள் ஆகும் என தெரிவித்துள்ளார்.