இனி Whatsapp குரூப்ல இந்த தொல்லை இல்ல

285
Advertisement

அண்மையில் வெளியாகி வரும் புதிய வாட்ஸாப் அப்டேட்கள் பயனர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பயனர்கள் ஆன்லைனில் இருப்பதை மறைக்கும் அம்சம் ஏற்கனவே பரிசீலனையில் இருக்கும் நிலையில் தற்போது வாட்ஸாப் குரூப்களில் பயனர்கள் தங்கள் நம்பரை மறைக்கும் option வர உள்ளது.

இதனால் பயனர்களின் அனுமதி இல்லாமல் நம்பர் மற்றவர்களுக்கு தெரிவது தவிர்க்கப்படுவதால் மேம்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த அப்டேட், பீட்டா பயனர்களுக்கு அறிமுகமான பின் பொதுப்பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.