Friday, February 14, 2025

இதையெல்லாம் கூகுளில் தேடவே கூடாது : இல்லைன்னா சிக்கல்தான்

நாம் அன்றாட வாழ்க்கையில் Google இணையதளத்தை பல விஷயங்களுக்காக பயன்படுத்துகிறோம், ஆனால் சில தகவல்களை கூகுளில் தேடுவது பாதுகாப்பில்லாமல் இருக்கலாம். இப்போது, கூகுளில் தேடக்கூடாத விஷயங்களை பார்க்கலாம்.

கூகுள் என்பது உங்கள் தேடல்களுக்கு தகவல் தேடி காட்டுகிறது. ஆனால் அந்த தகவலின் உண்மைத்தன்மை கூகுளுக்கு தெரியாது. எனவே எந்தத் தகவலும் நம்பும் முன் அதனை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

கூகுளில் தேடக்கூடாதவை:

ஆபாச தளங்கள்
ஆபாச தளங்களை தேடாதீர்கள். இது உங்கள் மின்னஞ்சலில் சேமிக்கப்படுவதுடன், அந்த தகவல்களுக்கு பொருந்திய விளம்பரங்களையும் பெற முடியும். மேலும், சில மோசடி தளங்கள் உங்களது தகவல்களை திருடும் வாய்ப்பும் உள்ளது.

ஆன்லைன் வங்கி தொடர்பான தகவல்கள்
போலியான வங்கி இணையதளங்களை தேடுவது தவிர்க்க வேண்டும். இது உங்களது வங்கி தகவல்களை தவறாக கொடுக்க வாய்ப்பு உள்ளது.

Also Read : பணம் பறிக்க புது ட்ரிக்…இந்த நம்பரிலிருந்து போன் வந்தால் உஷாரா இருங்க

கஸ்டமர் கேர் எண்கள்
கூகுளில் இருந்து எண்களை தேடும் போது, மோசடி தொலைபேசி எண்கள் முன்னிருக்கும் வாய்ப்பும் உள்ளது. இவை தவறான தகவல்களை பரிமாறும்.

ஆப் பதிவிறக்கம்
கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மட்டுமே ஆப் பதிவிறக்கம் செய்யவும். நேரடியாக கூகுளில் தேடும் போது, மோசடி ஆப்களில் சிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

போலியான அரசாங்க தளங்கள்
போலியான அரசாங்க தளங்களை அடையாளம் காண வேண்டும். அவர்கள் உங்களது பணத்தை திருட வாய்ப்புள்ளன. சரியான URL ஐ பயன்படுத்தி மட்டுமே உங்கள் தகவல்களை வழங்குங்கள்.

மின்னஞ்சல் மூலம் கணக்கு துவக்கம்
பழகிய, நம்பிக்கையான தளங்களை மட்டுமே இங்கு உபயோகப்படுத்தி கணக்குகளைத் தொடங்குங்கள். மோசடி தளங்களில் உங்கள் தகவல் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

முதலீட்டுக்கான வழிகாட்டிகள்
கூகுளில் காணப்படும் “ஒரே நாளில் கோடிகள் சம்பாதிக்கலாம்” போன்ற விளம்பரங்களை நம்ப வேண்டாம். சரியான ஆலோசனைகளை நம்புங்கள்.

இணைய விற்பனை (E-commerce)
இணையத்திலும் பல வணிக தளங்கள் உள்ளன. சில செயல்படும், சில மோசடி தளங்கள். நம்பிக்கைதிறன் உள்ள தளங்களை மட்டும் பயன்படுத்துங்கள்.

இலவச ஆன்டி-வைரஸ் மென்பொருள்
இலவச ஆன்டி-வைரஸ் மென்பொருட்களை கூகுளில் தேடுவது அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். சில நேரங்களில் உங்கள் தகவல்களை திருடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

Latest news