வெந்தயத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. வெந்தயம் உணவுகளிலும், மருத்துவ பொருள்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரும். வெந்தயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருந்தாலும் இதை அதிகமாக சாப்பிடக்கூடாது. வெந்தயத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
வெந்தயத்தை அதிகமாக எடுத்துக்கொண்டால் இருமல், வயிற்றுப்போக்கு, வாயு பிரச்சனை, சிறுநீரில் அதிக துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை எடுத்துக் கொண்டால், உங்களுக்கு தேவை இல்லாமல் வியர்வைகள் ஏற்படும்.
சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை நோயின் மருந்துகளோடு இந்த வெந்தயத்தை எடுத்துக் கொண்டால் அவருடைய உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறையும். இதனால் உடலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம்.