பல பயணிகள், குறிப்பாக விமான நிறுவனம் அல்லது விமான நிலைய குறியீடுகள் பற்றி அதிகம் அறியாதவர்கள். போர்டிங் பாஸில் பல சுருக்கக் குறியீடுகள் இருக்கும், அவற்றில் “RR” என்பது அடிக்கடி கேள்விகளை எழுப்பும் ஒன்றாக உள்ளது.
“RR” என்பதன் விரிவான அர்த்தம் Random Review (சில இடங்களில் Random Referral என்றும் சொல்வார்கள்). அதாவது, ஒரு பயணியை கூடுதல் பாதுகாப்பு சோதனைக்காக தேர்வு செய்திருக்கிறார்கள் என்பது பொருளாகும். திடீர் சோதனை, உங்கள் பயண முறைகள், டிக்கெட் எப்படி புக் செய்தீர்கள், அல்லது அந்த விமான நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகள் போன்றவை இதற்கான காரணங்களாக இருக்கலாம். இதற்கு நீங்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டீர்கள் என அர்த்தமில்லை.
போர்டிங் பாஸ் குறியீடுகள் உலகம் முழுக்க ஒரே மாதிரியானவை அல்ல. வெவ்வேறு விமான நிறுவனங்களும் விமான நிலையங்களும் தங்கள் உள் சுருக்கக் குறியீடுகளை வேறுவிதமாகப் பயன்படுத்தலாம். சில வேளைகளில் “RR” என்பது பாதுகாப்பு சோதனைக்கான குறியீடாக இல்லாமல், ஊழியர்கள் மட்டுமே அறிந்த வேலை தொடர்பான அல்லது முன்பதிவு தொடர்பான குறிப்பாக இருக்கலாம். அதாவது, அந்தக் குறியீட்டின் சரியான அர்த்தம், நீங்கள் பயணம் செய்கிற விமான நிறுவனத்தைப் பொறுத்து மாறலாம்.
உங்கள் போர்டிங் பாஸில் “RR” என்று இருக்கும் போது, பெரும்பாலும் கவலைப்பட வேண்டிய காரணமே இருக்காது. கூடுதல் சோதனைக்கு அழைக்கப்பட்ட பலரும், அந்தச் சோதனையை முடித்துவிட்டு, எந்த தடையும் இல்லாமல் விமானத்தில் ஏறிச் செல்கிறார்கள். விமான நிலைய ஊழியர்கள், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அமைதியாக வழிகாட்டுவார்கள். இந்த அனுபவம் பொதுவாக ஒரு சாதாரண செயல்முறை மாதிரிதான் இருக்கும்.
கூடுதல் சோதனைக்கு அழைக்கப்பட வாய்ப்பு இருக்கும் போது, உங்கள் கடவுச்சீட்டு, விசா, அடையாள அட்டை, பயண ஆவணங்கள் எல்லாம் எளிதாக எடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். ஊழியர்கள் சரிபார்க்கச் சொன்னால், ஆவணங்கள் ஒழுங்காக இருந்தால், அந்தச் செயல்முறை இன்னும் சுமுகமாக நடக்கும்.
உங்கள் போர்டிங் பாஸில் உள்ள எந்த குறியீடு பற்றியும் புரியவில்லை என்றால், செக்-இன் அல்லது போர்டிங் கேட்டில் இருக்கும் ஊழியர்களிடம் அமைதியாகக் கேளுங்கள். அந்தக் குறியீடு உங்களுக்காக எழுதப்பட்டதா அல்லது அது விமான நிறுவனத்தின் உள்ளகக் குறிப்பா என்பதை அவர்கள் விளக்கிக் கூறுவார்கள்.
