36 வயதுக்குள் 11 குழந்தைகள்.. மேலும் 6 குழந்தைகளுக்கு திட்டம்

278
baby
Advertisement

அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண் 11 குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் நிலையில் 12-வது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் வெரோனிகா. இவருக்கு தற்போது 36 வயதாகிறது. வெரோனிகா ஒன்பதாம் வகுப்பு பயிலும் போது முதன்முதலாக தாயானார்.

அவர் 14 வயதில் பெற்றெடுத்த குழந்தைக்கு இப்போது 21 வயதாகிறது. முதல் குழந்தை பிறந்து 5 ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் வெரோனிகா இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதனையடுத்து சில ஆண்டுகளில் முதல் கணவருடன் விவாகரத்தாகி விட்டதால் இரண்டாவதாக 37 வயதாகும் மார்ட்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டாவது கணவருடன் வசித்து வரும் நிலையில் 12-வது குழந்தைக்கு தாயாக உள்ளார்.

இவருக்கு சிறுநீரக இழப்பு உள்பட உடல்நல பிரச்னைகள் இருப்பதால் கருத்தடை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. விரைவில் 12 ஆவது குழந்தை பிறக்கும் நிலையில் வயிற்றுக்குள் குழந்தை இருக்கும் படத்தை வெரோனிகா தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல ஊடக நிறுவனத்திற்கு பேட்டியளித்த அவர் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை நிராகரிக்கவில்லை என்றும் இன்னும் ஆறு குழந்தைகளை பெற்றெடுக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

குழந்தைகளை அடையாளம் காண்பதற்காக ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு நிறத்தில் ஆடை அணிவித்துள்ளார் வெரோனிகா. வெரோனிகா-மார்ட்டி தம்பதியரின் குடும்பம் பெரிதாகி விட்டதால் ஒன்பது அறைகளை கொண்ட வீடு ஒன்றை 15 லட்சத்தில் வாங்கியுள்ளனர்.

12 குழந்தைகளின் தாயான வெரோனிகா சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.