தமிழ்நாட்டின் நலனுக்காக யாருக்கும், எதையும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மொழிப்போர், தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டை வஞ்சிக்க கூடாது என்று தெரிவித்துள்ள முதலமைச்சர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக போராட்டத்தை தொடங்கினோம் என்றும், கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஆதரவு வரத் தொடங்கிவிட்டது எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியை திணிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மத்திய அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.