கேள்விக்கு விடைகண்டுபிடிக்க ஹெலிகாப்டரில் பறந்த வாலிபர்

310
Advertisement

கற்பனையாக கேட்கப்பட்ட இயற்பியல் கேள்வி ஒன்றுக்கான சரியான விடையைத் தெரிந்துகொள்வதற்கு நிஜமான ஹெலிகாப்டரை வாடகைக் எடுத்து அதில் பறந்த வாலிபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2014 ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க இயற்பியல் ஒலிம்பியாட் அணிக்கான தகுதித் தேர்வில் ஹெலிகாப்டருக்கு அடியில் ஒரேமாதிரியான கேபிள் எப்படித் தொங்குகின்றன என்று கேட்கப்பட்டிருந்தது.

ஒரு ஹெலிகாப்டர் நிலையான வேகத்தில் கிடைமட்டமாகப் பறக்கிறது. ஹெலிகாப்டரின் அடியில் ஒரு முழுமையான நெகிழ்வான சீரான கேபிள் நிறுத்தப்பட்டுள்ளது. கேபிளில் காற்று உராய்வைக் குறைக்க முடியாது. ஹெலிகாப்டர் வலதுபுறமாகப் பறக்கும்போது கேபிளின் வடிவத்தைப் பின்வரும் வரைபடங்களில் எது சிறப்பாகக் காட்டுகிறது என்பதே விரிவானக் கேட்கப்பட்டிருந்தது.

இந்தக் கேள்விக்கு விடையாக ஐந்து பதில்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் சரியான பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதற்கான சரியான விடையைத் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டினார் யூ டியூப் சேனலை நடத்திவரும் முல்லர் என்ற வாலிபர். அதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்தார்.

அந்த ஹெலிகாப்டரின் அடியில் 20 பவுண்ட் எடையுள்ள கெட்டில்பெல்லைக் கீழே கட்டித் தொங்கவிட்டு, அது எப்படிப் பறக்கிறது என்பதைக் கண்காணித்தார். அதேசமயம், எடையற்ற சில பொருட்களையும் கட்டித் தொங்கவிட்டு அவை எப்படிப் பறக்கின்றன என்பதையும் கண்காணித்தார்.

முல்லரின் இந்தச் செயல் மாணவர்களை மட்டுமன்றி, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைவரையும் மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, மாணவர்கள் மத்தியிலும் பிரபலமாகத் தொடங்கியுள்ளது.