த.வெ.க. அரசுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. IUML சட்டமன்றக்குழு தலைவர் ஷாஜகான் சட்டசபையில் பேசுகையில், தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக உரையாற்ற வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், பாபநாசம் தொகுதி மக்களுக்கும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து , “ஜனநாயக விரோத சக்திகளின் சித்துவிளையாட்டில் தமிழ்நாடு சிக்கிவிடக்கூடாது என்பதற்காக த.வெ.க. அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம்” என்று கூறினார். மேலும், த.வெ.க. ஆட்சி மக்கள் போற்றும் நல்லாட்சியாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ஷாஜகான் தெரிவித்தார்.
