தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? 5 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு முன்பதிவில்லா மெமு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இதன்படி, தாம்பரம் – மானாமதுரை இடையே நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான ரயில் எண்கள் 06159, 06160, 06161 மற்றும் 06162 ஆகும்.

மேலும், திருச்சி TO தாம்பரம் இடையே நவம்பர் 7-ஆம் தேதி 06192 என்ற எண் கொண்ட ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூர் TO திருச்சி இடையே நவம்பர் 6-ஆம் தேதி 06191 என்ற எண் கொண்ட சிறப்பு ரயிலும், நவம்பர் 7-ஆம் தேதி 06193 மற்றும் நவம்பர் 9-ஆம் தேதி 06194 ஆகிய எண்களில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேற்கண்ட அனைத்து சிறப்பு ரயில்களும் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளன. பயணிகள் ரயில் புறப்படும் நேரம் மற்றும் நிறுத்த விவரங்களை முன்கூட்டியே சரிபார்த்துப் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் மூலம் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News