டிரம்ப் அமெரிக்க அதிபரான நிலையில் DOGE அமைப்பு இணைத் தலைவர் பதவியில் இருந்து விவேக் ராமசாமி விலகியுள்ளார்.
அமெரிக்க அரசின் நிர்வாகத்தை மேம்படுத்தும் முக்கிய அமைப்பாக DOGE அமைப்பு செயல்படுகிறது. DOGE அமைப்பு எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைமையில் இயங்கி வந்தது. இந்நிலையில் அவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து ஓகியோ மாகாண ஆளுநர் பதவிக்கு போட்டியிட விவேக் ராமசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.