27.05.2026; குறைந்து வரும் தங்கம் விலை.. குஷியில் நகை பிரியர்கள்… இன்றைய விலை நிலவரம்…

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத் தாழ்வுடன் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14,780-க்கும், ஒரு சவரன் ரூ.1,18,240-க்கும் விற்பனையானது. அதன் பின்னர் நேற்று தங்கம் விலையில் சற்றே சரிவு ஏற்பட்டது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கும், ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கும் விற்பனையாகியது.

கடந்த 22-ந்தேதியிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து மாற்றத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக, சவரன் ஒன்றுக்கு ரூ.400 வரை குறைவதும், பின்னர் மீண்டும் உயர்வதும் போன்ற நிலை தொடர்கிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.14,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு சவரன் தங்கம் ரூ.640 குறைந்து ரூ.1,17,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையின் இந்த சரிவு நகை வாங்க திட்டமிட்டுள்ள மக்களுக்கு சற்றே நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பின் மாற்றம் காரணமாக தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு வருகின்றன என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், பார் வெள்ளி ரூ.2,95,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

Related News

Latest News