விஜய் தான் சூப்பர்ஸ்டாரா? கொந்தளிக்கும் ரஜினி ரசிகர்கள்…குழப்பத்தில் கோலிவுட்!

174
Advertisement

சமீப காலமாகவே, பல ஊடகங்கள் மற்றும் முன்னணி சினிமா விமர்சகர்கள் விஜயை சூப்பர்ஸ்டார் என அடையாளப்படுத்தி வருகின்றனர்.

அதிலும், டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற்ற ‘வாரிசு’ ஆடியோ லாஞ்சிலும் பட தயாரிப்பாளர் தில் ராஜு, சரத் குமார் உள்ளிட்டோர் விஜயை சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு பேசினர்.

அதைத் தொடர்ந்து, பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி விஜயை சூப்பர்ஸ்டார் எனவும், ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர்ஸ்டார் என்றும் பேசிய விவகாரம் சமூகவலைதளங்களில் சர்ச்சையை பற்ற வைத்தது.

அதை தொடர்ந்து, பிஸ்மியின் வீட்டை முற்றுகையிட்ட ரஜினி ரசிகர்கள், ரஜினிகாந்தை முன்னாள் சூப்பர்ஸ்டார் என கூறியதற்கு கண்டனங்களை பதிவு செய்ததோடு அந்த கருத்தை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து, மாற்றுக்கருத்து கூறியதற்காக பத்திரிக்கையாளர் ஒருவரை அலுவலகம் சென்று ரஜினி ரசிகர்கள் மிரட்டியது நாகரீகமற்ற செயல் என்றும், ரஜினிகாந்தே அதை விரும்பமாட்டார் என்று நடிகர், இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் தற்போதைய சூப்பர்ஸ்டார் யார் என்பது விவாதப்பொருளாக மாறி கோலிவுட்டில் குழப்பமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.