Monday, January 20, 2025

விடாமுயற்சி ரிலீஸ் தேதி : துபாயில் அஜித் கொடுத்த அப்டேட்

நடிகர் அஜித் – இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் பொங்கலுக்கு வெளியாகாது என தகவல் வந்ததால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் துபாயில் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 23ம் தேதி வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளார்.

Latest news