Monday, January 20, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : திமுக சார்பில் வி.சி சந்திர குமார் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் காலமானதை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் இருக்கும் வி.சி சந்திர குமார் போட்டியிடுவார் என மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Latest news