Wednesday, December 4, 2024

வைரலாகும் ‘வாரிசு’ படத்தின் முதல் விமர்சனம்! படம் எப்படி இருக்கு?

வம்சி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் வாரிசு பட சென்சார் காட்சியை பார்த்தததாக கூறும் நபர் ஒருவர், படத்தின் முதல் விமர்சனத்தை இணையத்தில் பகிர்ந்து கவனம் ஈர்த்துள்ளார்.

அதில் விஜய் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆழமான குடும்பக் கதையில் பல அழுத்தமான உணர்வுகளை விஜய் அழகாக வெளிக்கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கதையில் புதுமை இல்லையென்றாலும், திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்ந்து செல்வதாகவும் மாஸ் entertainer ஆக படம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

ராஷ்மிகா திரையில் அழகாக தெரிவதாகவும், ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அப்பா மகன் மற்றும் அம்மா மகன் உறவில் உள்ள பல அடுக்குகளை படம் அணுகி இருப்பதாகவும் climax காட்சிகள் சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

முதல் பாதியில் இன்னும் எடிட்டிங் தேவைப்படுவதாக உணர்வதாகவும், படத்தின் துணை கதாபாத்திரங்கள் அனைவரும் சிறந்த நடிப்பை பங்களிப்பு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில் படத்திற்கு 3.5 நட்சத்திரங்கள் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ள இந்த விமர்சனத்தின் உண்மைத்தன்மை உறுதியாகவில்லை என்றாலும், இவரின் பதிவு சமூகவலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!