குண்டக்க மண்டக்க….ன்னா என்னன்னு தெரியுமா….?

310
Advertisement

குண்டக்கன்னா……குண்டக்க…… மண்டக்கன்னா…..மண்டக்க…
இதுக்குப் போயி விளக்கம் சொல்ல முடியுமான்னுதானே கேட்குறீங்க….?
இருக்கு-…..விளக்கம் இருக்கு-… அதாகப்பட்டது-…

அக்குவேர், ஆணிவேர்;
அக்குவேர்; செடியின் அடியிலுள்ள வேர்.
ஆணி வேர்; செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்.
அரை, குறை;
அரை; ஒரு பொருளின் சரி பாதி
குறை; அந்த சரி பாதி அளவில் குறைவாக இருப்பது-
அக்கம் பக்கம்;
அக்கம்; தன் வீடும் தான் இருக்கும் இடமும்
பக்கம்; பக்கத்தில் உள்ள வீடும் இடமும்
அலுப்பு சலிப்பு;
அலுப்பு; உடலில் உண்டாகும் வலி
சலிப்பு; உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும் சோர்வும்
ஆட்டம் பாட்டம்;
ஆட்டம்; தாளத்துக்குத் தகுந்தவாறு ஆடுவது
பாட்டம்; ஆட்டத்துக்குப் பொருத்தமில்லாமல் ஆடுவது-
இசகு பிசகு;
இசகு; தன் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்
பிசகு; தன்னுடைய அறியாமையால் ஏமாறுதல்
இடக்கு மடக்கு;
இடக்கு; கேலியாக நகைத்து இகழ்ந்து பேசுதல்
மடக்கு; கடுமையாக எதிர்த்து,தடுத்துப் பேசுதல்
ஏட்டிக்குப் போட்டி;
ஏட்டி; விரும்பும் பொருள் அல்லது செயல்
போட்டி; விரும்பும் செயலுக்கு எதிராக வருவது
ஒட்டு உறவு;
ஒட்டு; இரத்த சம்பந்தம் உள்ளவர்கள்
உறவு; கொடுக்கல் வாங்கல் முறையில் நெருக்கமானவர்கள்.
கிண்டலும் கேலியும்;
கிண்டல்; ஒருவர் மறைத்த செய்தியை அவர் வாயிலிருந்தே வாங்குவது-
கேலி; எள்ளி நகைப்பது
குண்டக்க மண்டக்க;
குண்டக்க; இடுப்புப் பகுதி
மண்டக்க; தலைப்பகுதி
நகைநட்டு;
நகை; பெரிய அணிகலன்கள்
நட்டு; சிறிய அணிகலன்கள்
பட்டி தொட்டி;
பட்டி; ஆடுகள் அதிகமாக வளர்க்கும் இடம்
தொட்டி; மாடுகள் அதிகமாக வளர்க்கும் இடம்
பிள்ளை குட்டி;
பிள்ளை; பொதுவாக ஆண் குழந்தைகளைக் குறிக்கும்
குட்டி; பெண் குழந்தைகளைக் குறிக்கும்

தமிழ் மொழியின் இனிமையை உணர்ந்துகொண்டால் சந்தோஷமாகவே
எப்போதும் பேசலாம், பழகலாம். வார்த்தைகளாலேயே சமாளிக்கலாம், ஜெயிக்கலாம்.

.