12 – 14 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்.

285
Advertisement

12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது.

சென்னையில் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது.

15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 60 வயதை தாண்டியவர்களுக்கு 3வது டோஸாக பூஸ்டர் தடுப்பூசி, ஜனவரி 10ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகிறது.

சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைக்க உள்ளார்.

இதேபோல், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு, 60 வயதை கடந்த அனைவரும் இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.