Friday, January 24, 2025

உத்தரகாண்ட் மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து : 3 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் 25 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் 1500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

நைனிடாலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரபல சுற்றுலாத் தலமான பீம்தாலில் இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்த அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

Latest news