புதிய மாணவர்களை சோப் நுரை வீசி வரவேற்ற பல்கலைக்கழகம்

382
Advertisement

புதிய மாணவர்களை சோப் நுரை வீசி ஸ்காட்லாந்து பல்கலைக் கழகம் வரவேற்ற செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

யுனைட்டெட் கிங்கின் அங்கமான ஸ்காட்லாந்தில் உள்ள மிகப்பழமையான ஆன்ட்ரூஸ் பல்கலைக் கழக நிர்வாகம் புதிய மாணவர்களை சோப் நுரை வீசி வரவேற்க அனுமதியளித்தது.

ஒவ்வொரு வருடமும் இங்கு வகுப்புகள் தொடங்கும் முதல்நாளில் முதலாமாண்டு மாணவர்களைப் புதுவிதமான முறையில் வரவேற்பது வழக்கம். மாணவர்களுடன் அவர்களின் பெற்றோர் தங்கள் கல்வித் தகுதியைக் குறிக்கும்விதமான உடையணிந்து வரலாம்.

அந்த வகையில் 2021ஆம் ஆண்டு புதுவிதமான வரவேற்புக்கு பல்கலைக் கழக நிர்வாகம் அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து சோப் நுரை வீசி மாணவர்களைப் பல்கலைக்கழகம் வரவேற்றது. பல்கலைக் கழகத்தின் இந்தச் செயல் கற்றலில் இனிமையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.

43க்கும் அதிகமான பாடப் பிரிவுகள் இங்கே உள்ளன.130 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். 2020- 2021 ஆம் கல்வியாண்டில் இளங்கலைப் பட்டதாரிகள் 7 ஆயிரத்து 985 பேரும், முதுகலைப் பட்டதாரிகள் 2 ஆயிரத்து 133 பேரும் என்று மொத்தம் 10 ஆயிரத்து 119 மாணவர்கள் பயில்கின்றனர்.

கிபி 1413 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆன்ட்ரூஸ் பல்கலைக் கழகம் ஆங்கில மொழி பேசும் நாடுகளிலேயே மூன்றாவது மிகப்பழமைமையான பல்கலைக் கழகமாகும்.
ஸ்காட்லாந்தின் கிழக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள. இந்தப் பல்கலைக் கழகம் யுனைட்டெட் கிங்கிலேயே தலைசிறந்து விளங்குகிறது.

கல்வியில் தங்கள் இலட்சியத்தைத் தாண்டியும் பல்வேறு சாதனைகளைப் படைக்க சிறந்த கல்வி போதனை முறைகளையும் கற்றல் அனுபவத்தையும் மாணவர்கள் இங்கே ஒருங்கே பெற்றுவருகின்றனர்.