ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்த முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு சமர்ப்பித்த அறிக்கையை, மத்திய அமைச்சரவை கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து, நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி வருகிறது.