கோவை, பீளமேடு, எல்லை தோட்டத்தைச் சேர்ந்தவர் கீதாரமணி (56). இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக பைக்கில் இரு பெண்கள் வழி கேட்பது போல கீதாரமணியிடம் பேச்சு கொடுத்தனர்.
அப்போது, பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த பெண், கீதாரமணியின் 4.5 சவரன் தாலி செயினை பறித்து அங்கிருந்து தப்பமுயன்றுள்ளனர். அப்போது கீதாரமணியின் கணவர் மற்றும் மகன் இருவரும் சேர்ந்து அந்த இரண்டு பெண்களையும் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
நகை பறிப்பில் ஈடுபட்டது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, 37, அபிராமி, 36, என விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.