ஒரே நேரத்தில் 2 வளிமண்டல சுழற்சி; 3 மாவட்டங்களில் கனமழை!!

தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி, வட தமிழகத்தின் மேலுள்ள சுழற்சி மற்றும் மன்னார் வளைகுடா முதல் மத்திய மகாராஷ்டிரா வரையிலான காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக மழை பெய்யக்கூடும்.

மேலும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யலாம்.

நாளை பல மாவட்டங்களில் மிதமான மழையும், வரும் 8-ம் தேதி கோவை மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது. 9-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களிலும், 10-ம் தேதி கோவை மலைப்பகுதிகள் மற்றும் தேனியிலும் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 11, 12-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் மிதமான மழைக்கும், வட தமிழகத்தில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று, நாளை மாலை மற்றும் இரவு நேரங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

Related News

Latest News