கர்நாடக மாநிலம் பீதர் நகரில் உள்ள ஒரு ஏ.டி.எம். இயந்திரத்தில் நிரப்ப பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
ஏ.டி.எம்.களில் பணம் போட சென்றபோது பைக்கில் வந்த மர்மநபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் கிரி வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.