குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வாலின் இரண்டு மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுனிதா அகர்வால் ஒரு திருமணத்தில் கலந்துகொள்வதற்காக ஜன. 26 அன்று டேராடூனுக்குச் சென்றிருந்தார். அன்று மாலை அவரது இரண்டு ஐபோன்கள் திருடப்பட்டன. தகவலறிந்த காவல்துறையினர் திருமண நிகழ்வு நடக்கும் இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். எனினும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.