Monday, January 20, 2025

போட்டி போட்டுக்கொண்டு சென்ற பேருந்துகள் மோதியதில் சேதம்

திருப்பூரில் போட்டி போட்டு வந்த தனியார் பேருந்தும், மினி பேருந்தும் மோதிக்கொண்டதில் மினி பேருந்தின் முன்பக்கம் சேதம் அடைந்தது.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் இருந்து பயணிகளை ஏற்றுக்கொண்டு திருப்பூர் வந்த தனியார் பேருந்தும், முருகம்பாளையம் வழியாக திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் நோக்கி சென்ற மினி பேருந்தும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு வந்ததால், சாலையில் சென்ற மக்களும், பேருந்தில் இருந்த பயணிகளும் அச்சமடைந்தனர்.

இதனிடையே, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இரண்டு பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றும் மோதிக்கொண்டன. இதில், மினி பேருந்தின் முன்பக்கம் சேதம் அடைந்தது. இதனால் இரண்டு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் நடுரோட்டில் இறங்கி வாய்த்தகராறில் ஈடுபட்டனர். பொதுமக்கள் எச்சரித்ததை தொடர்ந்து, இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் கிளம்பி சென்றனர்.

Latest news