திண்டுக்கல் வீர சின்னம்பட்டியை சேர்ந்த கேட்டரிங் மாஸ்டர் ராஜாராம் (33). இவருக்கு சொந்தமான மாந்தோப்பில் கடந்த சில நாட்களாக குரங்குகள் புகுந்து பயிர்களை நாசம் செய்துள்ளது. இதனால் ஆத்திரம் அனடந்த அவர் குரங்குகளை சுட்டுக்கொல்ல ஜெயமணி என்பவரிடம் கூறியுள்ளார்.
ஜெயமணி, தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால் குரங்கை சுட்டு கொன்று பிறகு அதனை சமைத்து சாப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் வனத்துறையினருக்கு தெரிய வர ராஜாராம், ஜெயமணி இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்த குரங்கு தோல், நாட்டு துப்பாக்கி, வெடி மருந்தை பறிமுதல் செய்யபட்டது அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.