அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வீடியோ ஷேரிங் தளமாக, டிக்டாக் செயலி மிகவும் பிரபலமாக உள்ளது. கடந்த ஜனவரி 20ம் தேதி ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் டிக்டாக் உரிமை மாற்றம் தொடர்பான காலக்கெடுவை 75 நாட்கள் நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் டிக்டாக் செயலியை வாங்க மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். டிக்டாக் செயலியை வாங்குவதற்கு பல நிறுவனங்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளன என்றும் அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு ஏலம் கேட்க வேண்டும் என விரும்புகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார்.