அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், அமெரிக்காவில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும் வகையில், ஊதிய பலன்களுடன் கூடிய விருப்ப ஓய்வு திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
விருப்ப ஓய்வு திட்டட்தை ஏற்றுக்கொள்ள, வரும் பிப்ரவரி 6-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு, செப்டம்பர் 30-ந்தேதி வரை 7 மாத காலத்திற்கு ஊதியம் மற்றும் சலுகைகள் உள்ளிட்டவை தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.