போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன்படி கடந்த இரண்டரை மாதங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாக 82 ஆயிரத்து 330 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து சந்திப்புகளில் Stop Line-ஐ தாண்டி வாகனங்களை நிறுத்தியதற்காக 3 ஆயிரத்து 328 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வேகமாக வாகனங்களை ஓட்டி சென்ற 677 பேர் மீதும், செல்போன் பேசி கொண்டு வாகனங்கள் இயக்கிய 3 ஆயிரத்து 328 பேர் மீதும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டிய 4 ஆயிரத்து 191 மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வணிக வாகனங்களில் பொதுமக்களை ஏற்றி சென்றதற்காக 7 ஆயிரத்து 383 வழக்குகளும், ஹெல்மெட் போடாமல் சென்றதற்காக 33 ஆயிரத்து 331 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.