சுற்றுலா வழிகாட்டியான பென்குயின்

373
Advertisement

பென்குயின் ஒன்று சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்ட வீடியோ சுற்றுலாப் பிரியர்களை மட்டுமன்றி அனைவரையும் கவர்ந்துவருகிறது.

ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் படகு ஒன்றில் சுற்றுலாப் பயணிகள் சிலர் அமர்ந்திருக்கின்றனர். படகின் முனையில் பென்குயின் ஒன்று அமர்ந்து அந்தப் படகை வழிநடத்திச்செல்கிறது.

ஏரியில் பயணிக்கிறது அந்தப் படகு. ஏரியின் நடுவே அமைந்துள்ள பனிப்பாறை அருகே படகு சென்றதும், படகிலிருந்து பனிப்பாறையில் குதித்து ஓடுகிறது அந்த வழிகாட்டிப் பென்குயின்.

அங்கே நிறைய பென்குயின்கள் இருப்பதைப் பார்த்ததும் உற்சாகமாக ஓடிய அந்த வழிகாட்டி பென்குயினைக் கண்டும், பென்குயின் கூட்டத்தைக் கண்டும் சுற்றுலாவாசிகள் ஆனந்தத்தோடு ஆரவாரம் செய்கின்றனர். அத்துடன், தங்கள் செல்போனில் அவற்றைப் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியடைந்தனர்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கியதையடுத்து மேலும் உற்சாகம் அடைந்தனர் சுற்றுலாப் பயணிகள்.

பொதுவாக, சுற்றுலா வழிகாட்டியாக செயல்படுபவர்களுக்கு சுற்றுலாத் தலங்களைப் பற்றிய விவரங்கள், பன்மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளுடன் தயக்கமின்றி, அவர்கள் மனம் கோணாதபடி நடந்து அவர்களை சுற்றுலாத் தலங்களுக்குள் அழைத்துச்சென்று அவற்றைப் பற்றி பயணிகளுக்குத் தெரிந்த மொழியில் எடுத்துக்கூறி மகிழ்விக்க வேண்டும். அப்போதுதான், சுற்றுலாவும் இனிமையாக அமையும், வழிகாட்டிக்கும் நிறைவான கட்டணம் கிடைக்கும்.

ஆனால், சுற்றுலாத் தலங்களைப் பற்றிய விவரம், பன்மொழிப் புலமை எதுவுமின்றி தன்வார்வலர்போல பென்குயின் ஒன்று செயல்பட்டு வழிகாட்டிய செயல் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.