Tooth brush ஆல்
பல் துலக்கிய முதலை

349
Advertisement

https://www.instagram.com/reel/CaCt0Ohp6zC/?utm_source=ig_web_copy_link

டூத் பிரஸ்ஸால் முதலை பல் துலக்குவதுபோன்ற
நிகழ்வு சமூக ஊடகத்தில் உலா வருகிறது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில்
பதிவிடப்பட்டுள்ளது. வன உயிரியல் பூங்காவில்
எடுக்கப்பட்ட அந்தக் காட்சி தற்போது அனைவரையும்
கவர்ந்து வருகிறது.

அந்த வீடியோவில் அமெரிக்க யூ டியுபர் ஜே ப்ரூவர்
சிறிய முதலைக் குட்டியைத் தனது கைகளில் தாங்கியுள்ளார்.
தென்னை என்று பெயரிடப்பட்டுள்ள வெண்ணிறமான
அந்தக் குட்டிப் பெண் முதலை அல்பினோ இனத்தைச் சேர்ந்தது.

அந்தக் குட்டிப் பெண் முதலையின் முதுகை டூத் பிரஸ்ஸால்
ஜே ப்ரூவர் சொறிந்து கொடுக்க, குட்டி முதலையோ வாயைத்
திறந்து திறந்து காட்டுகிறது.

அந்தக் காட்சி, பார்ப்பதற்கு முதலை பல் துலக்குவதுபோலத்
தெரிவதாக இந்த வீடியோவை ரசித்துப் பார்த்தவர்கள்
குறிப்பிட்டுள்ளனர்.