Tuesday, January 20, 2026

இரண்டாவது நாளாக அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.9,305 க்கும் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 74,440 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 குறைந்து ஒரு கிராம் ரூ.9,200 க்கும் சவரனுக்கு ரூ.840 குறைந்து ஒரு சவரன் ரூ.73,600 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News