அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு… எப்போது விடுமுறை தொடக்கம்? வெளியான முழு விவரம்!

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கும் தேர்வுகள் டிசம்பர் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் தேர்வு நேரங்கள் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 1, 2, 3 மற்றும் 6ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 4, 5 மற்றும் 7ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும்.

8, 9ஆம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். 11ஆம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெறும்.

டிசம்பர் 22ஆம் தேதியுடன் தேர்வுகள் நிறைவடைகின்றன. டிசம்பர் 23ஆம் தேதி பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும். அதன்பிறகு டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து 2027 ஜனவரி 4ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். அன்றைய தினம் 1 முதல் 7ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் பருவப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. மேலும், திருத்தப்பட்ட விடைத்தாள்களை மாணவர்களுக்கு வழங்கி மதிப்பெண்களைப் பதிவேற்றவும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related News

Latest News