கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 10-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தங்கம் விலை சரிவைக் கண்ட நிலையில், அதன்பிறகு மீண்டும் விலை உயரத் தொடங்கியது. அமெரிக்க மத்திய பெடரல் வங்கி அடுத்த மாதம் 9-ஆம் தேதி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதன் காரணமாக தங்கம் விலை முன்கூட்டியே சரிவைக் கண்டது. இருப்பினும், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் விலை உயர்ந்து வந்தது. நேற்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.60 உயர்ந்து ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் மேலும் ஒரு கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.230-ம், சவரனுக்கு ரூ.1,840-ம் அதிகரித்தது.
இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனை ஆகிறது.
மறுபுறம், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் தங்கம் விலை, வரும் நாட்களில் எந்த திசையில் நகரும் என்பது முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குவோர் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
