மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் அம்மாநில முதல்வர் பைரேன் சிங் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த மே 3 முதல் இன்று வரை என்ன நடக்கிறது என்பதற்கு நான் வருந்துகிறேன்.
பலர் தங்கள் அன்புக்கு உரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நாம் இப்போது கடந்த கால தவறுகளை மறந்து, புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும். 2025 புத்தாண்டுடன் மாநிலத்தில் இயல்பு நிலையும் அமைதியும் திரும்பும் என நம்புகிறேன் என அவர் பேசியுள்ளார்.