https://www.instagram.com/p/CVvpfXnsowO/?utm_source=ig_web_copy_link
அப்படியே சாப்பிடலாம் என்பதுபோல ஒரு புறா வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேட்கவே விநோதமாக இருக்கிறதா?
ஆப்டிகல் மாயையான கேக்குகளைத் தயாரித்து வாடிக்கையாளர்களை வியக்க வைப்பதில் புகழ்பெற்றவர் பென் கல்லன். இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரைச் சேர்ந்தவரான இவர் வெவ்வேறு விதங்களில் கேக்குகளைத் தயார்செய்து அதனைத் தனது யூ டியூப் சேனல்களிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சில மாதங்களுக்குமுன்பு இவர் செய்த புறா வடிவ கேக் இணைய தளவாசிகளையும், கேக் பிரியர்களையும் சட்டென்று கவர்ந்துவிட்டது.
நிஜமான புறாவோ என்று வியந்து பார்க்கும் விதத்தில் தத்ரூபமாக இந்தக் கேக்கை அவர் செய்துள்ளார்.
இந்தக் கேக்குகளை செய்வதிலோ தின்பதிலோ புறாக்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று வேடிக்கையாகத் தனது வலைத்தளப் பக்கத்தில் கூறியுள்ளார் பென் கல்லன்.
வழக்கமான கேக்குதான்….வடிவம்தான் வேறு….வாடிக்கையாளர்களைக் கவர புதுமுயற்சி…