நடனமாடி காவல்துறையை வெறுப்பேற்றிய திருடன்

159
Advertisement

ஒரு காலத்தில் திருடன் என்றாலே சிலருக்கு பயத்தை  ஏற்படுத்தும்.தற்போது எல்லாம் வேறு வழி இல்லாமல் திருடனாக மாறும் பலபேர்,  திருட முயன்று வசமாக மாட்டிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதையாக மாறிவிட்டது,

அதிலும் சில திருடர்கள் செய்யும்  சேட்டைகள் நகைப்பை உண்டுபண்ணும். இதுபோன்று மற்றொரு  சம்பவம் உ.பி யில் நடந்துள்ளது.

ஹார்டுவேர் கடையில் கொள்ளையடித்த திருடன் ஒருவரின் விசித்திரமான நடனம் கண்காணிப்பு  கேமராவில் பதிவாகியுள்ளது.ஏப்ரல் 16 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் சந்தௌலியில் (Chandauli)  காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரின் வீட்டிற்கு அருகில் உள்ள  கடை ஒன்றில் முகத்தை மூடிக்கொண்டு கடைக்குள் நுழைந்த திருடன்

Advertisement

தனக்கு வேண்டியதை திருடி விட்டு நடனம் ஆடுகிறான். பின் சில வினாடிகள் நடனம் ஆடிவிட்டு உள்ளே நுழைந்த வழியே பதுங்கி வெளியே சென்று தப்பிவிட்டான். கேமராவை பார்த்துவிட்டு தான் , காவல்துறையை வெறுப்பேற்ற ஆடியது போல தெரிகிறது.

இந்த வீடியோவை ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார், அவர் தனது ட்வீட்டில் சந்தோலி காவல்துறை மற்றும் கூடுதல் காவல்துறை இயக்குநரை  டேக் செய்து, ” திருடன் திருடி விட்டு கொண்டாடுகிறான். உங்களுக்கு ஏதாவது பொறுப்பு இருக்கிறதா  ? “ என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து , குற்றவாளி மீது காவல்துறை  வழக்குப்பதிவு செய்து, தற்போது இந்த ‘டான்ஸ் திருடனை’ தேடி வருகின்றனர்.திருடவந்த இடத்தில் காவல்துறையை வெறுப்பேற்ற நடனமாடிய திருடனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.