மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகள் மற்றும் கணவருடன் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண் பாரக்பூரில் வசிக்கும் ரவிதாஸ் என்பவருடன் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார். இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதற்கிடையே, “நம் மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணத்தைச் சேமித்து வைக்க வேண்டும். அதற்காக உங்களது சிறுநீரகத்தை ரூ.10 லட்சத்திற்கு விற்றுவிடுங்கள்” என அந்தப் பெண் தன் கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். இதற்கு சம்மதித்த அந்த பெண்ணின் கணவர் தனது சிறுநீரகத்தை விற்று பணம் வாங்கி வந்துள்ளார்.
அந்த பெண் பணத்தை எடுத்துக்கொண்டு தனது முகநூல் காதலனுடன் ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.