பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஒரு பெண்ணை டெலிவரி செய்த வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் அமேசான் நிறுவன வாகனம் ஒன்றின் பின்புறக் கதவை ஒருவர் திறக்க, அந்த வாசலிலிருந்து ஒரு பெண் வெளியேறும் காட்சி அமேசான் வாடிக்கையாளர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு, அக்டோபர் 24 ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படும் இந்த சம்பவத்தை 12 மில்லியன்பேர் வீடியோ மூலம் பார்வையிட்டுள்ளனர். கடுமையான விமர்சனங்களையும் பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.
அதையடுத்து அமேசான் நிறுவனத்தின் கவனத்துக்கும் இந்த வீடியோ சென்றது. இதுபற்றி அமேசான் நிர்வாகம் விசாரித்தபோது இந்தச் செயலைச் செய்தது அமேசான் நிறுவனத்தின் முகவர் என்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து உடனடியாக அந்த முகவரைத் தன்னுடைய நிறுவனத்திலிருந்து விலக்கிவிட்டது அமேசான் நிறுவனம்.
”எங்கள் டெலிவரி வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைய அனுமதிக்கப்படுவது கொள்கை மீறிய செயல். எனவே, அந்த ஏஜண்டை எங்கள் நிறுவன வியாபாரத்திலிருந்து விலக்கிவிட்டோம்” என்று தெரிவித்துள்ளது அமேசான்.
ரொம்ப உஷாரா இருக்க வேண்டியிருக்கு…பிசினஸ் நடத்துறவங்களும் வாடிக்கையாளர்களும்..