பறவையாக மாறிய மரம்

211
Advertisement

ஒரு மரமே சிறகை விரித்துப் பறந்துசெல்வதுபோல உள்ள வீடியோ காட்சி வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

தொட்டாற்சிணுங்கிச் செடியை நினைவுகூரும் விதமாக அமைந்துள்ளன அந்த வீடியோவில் உள்ள காட்சிகள்.

ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒரு மரத்தில் ஏராளமானப் பறவைகள் தங்கியிருக்கின்றன. பொழுது புலர்ந்ததால், இரை தேடுவதற்காக அவையனைத்தும் ஒரே சமயத்தில் விருட்டெனப் பறந்துசெல்கின்றன. அந்தக் காட்சி தொட்டாற்சிணுங்கிச் செடியை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது.

இலைகளை விரித்துப் பசுமையாகக் காட்சியளிக்கும் தொட்டாற்சிணுங்கிச் செடியைத் தொட்டதும், சட்டென சுருங்கிவிடுவதைப் பார்த்திருப்போம். அதைப்போல், விரிந்து பறந்திருக்கும் கிளைகளில் அமர்ந்துள்ள அந்தப் பறவைக்கூட்டம் ஒட்டுமொத்தமாகப் பறந்து செல்கின்றன.

அதனால், அவை அமர்ந்திருந்த கிளைகள் அனைத்தும் சுருங்கிக்கொள்கின்றன. இந்தக் காட்சி கண்கொள்ளாக்காட்சியாக மனதை வருடுகிறது.

ஐஏஎஸ் அதிகாரி திரிபான்சு காப்ரா தனது ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில் ஒரு வீட்டின் பின்பகுதியில் ஒரு மரம் ஓங்கி உயர்ந்து வளர்ந்துள்ளது. அந்த மரத்தில் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான பறவைகளும் ஒரே நேரத்தில் சிறகை விரித்துப் பறந்து செல்கின்றன. அந்தக் காட்சி, மரமே பறவையாக மாறி, தனது சிறகை சுருக்கி விரித்துப் பறப்பதுபோல உள்ளது.

ஒரே நேரத்தில் அனைத்துப் பறவைகளும் பறந்துசென்றதால், மரமே ஒரு கணம் ஆடிப்போனது தத்ரூபமாக அமைந்து மனதை மகிழ்விக்கிறது.